Published : 13 Oct 2020 07:47 AM
Last Updated : 13 Oct 2020 07:47 AM

சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் 16-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக குழு, செயற்குழு கூட்டம்: தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

கமல்ஹாசன்

சென்னை

சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழுக் கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் வரும் 16-ம் தேதிநடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு, செயற்குழு கூட்டம்வரும் 16-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 16-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தியாகராய நகரில் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறுவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தேர்தலை திறம்பட எதிர்கொள்ள கட்சியின் தேர்தல் நிதியை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு, சிறப்பு கிராம சபை கூட்டங்களை விரைந்து நடத்தப்படுவதற்கான வழிவகைகள் உள்ளிட்டவை குறித்துஇக்கூட்டத்தில் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

வெளிப்படையான நிர்வாகம்

இந்நிலையில் நேற்று கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2.2 லட்சம் கோரிக்கைகள் இன்றும் மத்திய, மாநில தகவல் உரிமை ஆணையங்களில் நிலுவையில் உள்ளன. வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும். ஒவ்வொரு குடிமகனும் தமக்கான உரிமையைப் பெறத் தெளிந்தால் நாமே தீர்வு என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x