

ரயில்வே துறையில் தூய்மைப் பணி களை மேம்படுத்தும் வகையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தெற்கு ரயில்வே உட்பட 3 ரயில்வே மண்டலங் களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட் டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே மண் டலங்களுக்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் வகை யில் தனிப்பிரிவு உருவாக்கப்பட் டுள்ளது. இதற்கு ‘சுற்றுச்சூழல் மற்றும் தூய்மைப் பணிகளுக்கான மேலாண்மை இயக்குநரகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து மண்டலங்களுக்கும் உட்பட்ட ரயில் நிலையங்களில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும். முதல்கட்டமாக வடக்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே, தெற்கு ரயில்வேயில் இத்திட்டம் அமல் படுத்தப்படுகிறது. வெற்றிகரமாக செயல்படுத்திய பின்னர், எஞ்சிய 13 மண்டலங்களிலும் அமல்படுத் தப்படும். தூய்மைப் பணியில் தொழில்நுட்ப பணியாளர்கள் ஈடு படுத்தப்படுவார்கள். நவீன தொழில் நுட்பங்களும் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கென தனிப்பிரிவு தொடங்கிருப்பதால், தூய்மைப் பணிகளை மேலும் சிறப்பாக செயல்படுத்த முடியும்’’ என்றனர்.