

கிரானைட் ஏற்றுமதியை மறைத்து சுங்கத் துறையினர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டனரா என சட்ட ஆணையர் உ.சகாயம் விசாரித்து வருகிறார்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து சட்ட ஆணையர் உ.சகாயம் விசாரித்து வருகிறார். கிரானைட் கற்கள் எவ்வளவு வெட்டி எடுக்கப்பட்டுள்ளன என சகாயம் விசாரித்து வருகிறார். தூத்துக்குடி துறைமுகம் மூலம் கிரானைட் ஏற்றுமதி செய்த விவரங்களை சகாயம் ஏற்கெனவே பெற்றுள்ளார். சுங்கத்துறை, கிரானைட் நிறுவனங்களிடமிருந்தும் பல தகவல்கள் திரட்டப்பட்டது. சுங்கத்துறையினர், துறைமுகம் அளித்த ஏற்றுமதி விவரங்கள் ஒத்துப்போகவில்லை.
இது குறித்து விசாரித்தபோது வரி ஏய்ப்புக்காக கிரானைட் கற்களை குறைத்து சுங்கத் துறையினர் குறைத்து காட்டி யுள்ளது தெரிந்தது. இது குறித்து சகாயம் ஆய்வுக்குழு அலுவலர் கூறுகையில், கிரானைட் அதிபர்களுக்கு சாதகமாக வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என விசாரிக்க சகாயம் திட்டமிட்டுள்ளார். இதற்காக தூத்துக்குடி துறைமுகத்துக்கு ஓரிரு நாளில் சகாயம் செல்லவுள்ளார். இதற்கு முன்னதாக, சுங்கத் துறையினர் வரி வசூலிக்கும் முறைகள், ஏய்ப்பு செய்வதற்காக வாய்ப்புகள் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள விரும்பினார். இதற்காக ஓய்வுபெற்ற சுங்கத் துறை ஆணையர் ராஜனுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.