திண்டுக்கல்லில் மானாவாரி பயிர்கள் கருகியதால் பாதிப்பு: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் 

திண்டுக்கல்லில் மானாவாரி பயிர்கள் கருகியதால் பாதிப்பு: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் 
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் மானாவாரி பயிர்கள் கருகியதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழையை நம்பி பலநூறு ஏக்கர் பரப்பில் மானாவாரியாக மக்காச்சோளம், பயிர் வைகைகள், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திருந்தனர்.

தென்மேற்கு பருவமழை தொடக்கத்தில் அதிகம் பெய்ததையடுத்து மானாவாரியாக அதிகபரப்பில் சாகுபடிசெய்யப்பட்டது. ஆனால் நாற்றுநடவுசெய்தபிறகு போதிய மழை இல்லை.

இதனால் பயிர்கள் கருகத்தொடங்கின. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, கல்லுக்கோட்டை, நாகையன்கோட்டை, சிக்கனம்பட்டி, பண்ணைப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேல் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன.

தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாதது, வடகிழக்கு பருவமழை தாமதம் என பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

இதனால் பயிர்கள் கருகத்தொடங்கின. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று கருகிய மக்காச்சோளம், கடலை பயிர்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

காய்ந்த பயிர்களை திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் காண்பித்து தங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in