விஜயகாந்தின் பிரச்சாரம் திடீர் ரத்து
விஜயகாந்தின் சிதம்பரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னணியில், அறிவிக்கப்பட்ட தேமுதிக வேட்பாளரின் மாற்றமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
விஜயகாந்தின் புதுச்சேரி பிரச் சாரத் திட்டம் ரத்து செய்யப்படு வதாக செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி அளவில் ஆங்காங்கே கட்டப்பட்டி ருந்த டிஜிட்டல் பேனர்களை கட்சி நிர்வாகிகளே அகற்றினர்.
கடலூர் தொகுதி தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமானுஜம் சென்னையைச் சேர்ந் தவர் என்பதாலும் கட்சியினருக்கு போதிய அறிமுகம் இல்லாதவர் என்பதாலும் தேமுதிகவினர் ஆங் காங்கே எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப் பாட்டம் நடத்திவந்தனர். இதை அறிந்த விஜயகாந்த், வேட்பாளரை மாற்றும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல நிதி நிறுவன அதிபரை தேர்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
