கிராவல் குவாரிக்காக கண்மாய் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றிய குவாரி உரிமையாளர்கள்

பேயம்பட்டி கிராமத்தில் கிராவல் குவாரிக்கு இடையூறாக இருப்பதாக கண்மாய்க் கரையை உடைத்து வெளியேற்றப்படும் தண்ணீர்.
பேயம்பட்டி கிராமத்தில் கிராவல் குவாரிக்கு இடையூறாக இருப்பதாக கண்மாய்க் கரையை உடைத்து வெளியேற்றப்படும் தண்ணீர்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலூர் குரூப்பில் உள்ள பேயம்பட்டி கிராம கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றிய கிராவல் குவாரி உரிமையாளர்களின் செயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேயம்பட்டி கண்மாயை ஒட்டிய பகுதியில் கிராவல் குவாரிகள் செயல்படுகின்றன. இக்கண்மாயில் தண்ணீர் தேங்கினால் மண் அள்ள முடியாத நிலை ஏற்படும் என்பதால், குவாரி உரிமையாளர்கள் கண்மாய்க் கரையை உடைத்து சுமார் 1 கி.மீ. நீளத்துக்கு இயந்திரம் மூலம் வாய்க்கால் அமைத்து கண்மாயில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றிவிட்டு, கிராவல் குவாரியைத் தொடர்ந்து நடத்தியுள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பேயம்பட்டி கிராமத்தினர், காரைக்குடி வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் செய்துள்ளனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் கண்மாயைப் பார்வையிட்டுக் கரையை அடைத்துள்ளனர்.

ஆனால் கரையைச் சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றிய குவாரி உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தில் எவ்வித புகாரும் அளிக்கவில்லை.

எனவே விவசாயத்திற்காக கண்மாயில் தேக்கிய தண்ணீரை வெளி யேற்றியதால் விவசாயிகள் வேளாண் பணி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கரையை உடைத்துச் சேதப்படுத்திய குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in