Published : 12 Oct 2020 11:25 AM
Last Updated : 12 Oct 2020 11:25 AM

புதுச்சேரியில் வரும் 15-ல் திரையரங்குகள் திறப்பு ஒரு திரையரங்கில் கட்டணம் குறைப்பு

புதுச்சேரியில் வரும் 15-ம் தேதி திரையரங்குகள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் சூழலில் ரசிகர்களை கவர டிக்கெட் கட்டணத் தையும், பார்க்கிங் கட்டணத்தையும் ஒரு திரையரங்கம் குறைத்து அறிவித்துள்ளது.

கரோனாவால் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் மத்திய அரசு 5-ம் கட்ட தளர்வுகளை கடந்த மாதம் அறிவித்தது.

அப்போது, சமூக இடைவெளியை பின்பற்றி 50 சதவீதஇருக்கைகளுடன் திரையரங்கு களை திறக்க அனுமதி வழங்கி யது. இதன் காரணமாக, புதுச்சேரி யிலும் திரையரங்குகளை திறக்க ஆட்சியர் அருண் அனுமதி வழங் கியுள்ளார்.

ஓடிடி, தொலைக்காட்சி வழியாக பார்ப்பதை விட திரையரங்குகளில் திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.6 மாதங்களுக்கு பிறகு பாதி இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதால் கட்டணம் உயருமோ என்று ரசிகர்கள் கருதினர்.

இந்நிலையில் திருவள்ளுவர் சாலையில் இயங்கி வரும் 2 ஸ்கிரீன்கொண்ட ஒரு திரையரங்கம் பொதுமக்களை கவரும் வகையில் டிக்கெட் மற்றும் பார்க்கிங் கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக திரையரங்கம் தரப்பில் விசாரித்தபோது, “நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கிறோம். முழு தூய்மை வசதியுடன் போதியபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்கிறோம். அத்துடன் டிக்கெட் கட்ட ணத்தையும் குறைத்துள்ளோம். அதன்படி ரூ.120 டிக்கெட் ரூ.100ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75ஆகவும், நான்கு சக்கர வாகனத் திற்கான பார்க்கிங் கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.30 ஆகவும், இருசக்கர வாகனத்திற்கு ரூ.20-ல்இருந்து ரூ.10 ஆகவும் குறைத் துள்ளோம். நவம்பர் 30 வரை முகக்கவசமும் தர உள்ளோம்” என்று குறிப்பிட்டனர்.

இதேபோல் புதுச்சேரியிலுள்ள பல திரையரங்குகளும் மக்களை கவர்ந்து திரையரங்கத்துக்கு வர வழைக்க கட்டணத்தை குறைக்க வாய்ப்புள்ளதாகவும், அதுபற்றி பேசி விரைவில் முடிவு எடுக்க உள்ளதாகவும் திரையரங்க வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x