

கரோனா தொற்றுக்கான பிசிஆர்பரிசோதனையில் நெகட்டிவ் எனவந்தாலும், சிடி ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்பது பிசிஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் 66 அரசு மருத்துவமனைகள், 125 தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பிசிஆர் பரிசோதனையில் வைரஸ் தொற்று (பாசிட்டிவ்) இருந்தாலும், தொற்றுஇல்லை (நெகட்டிவ்) என வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டபோது, “காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள்இருப்பவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்கின்றனர். தொண்டை, மூக்கில் இருந்துமாதிரிகள் எடுத்து செய்யப்படும் பிசிஆர் பரிசோதனையில் துல்லியமான முடிவுகள் கிடைப்பதில்லை. 70 சதவீதம் பேருக்கு மட்டுமே பரிசோதனையில் சரியான முடிவுகிடைக்கிறது.
பரிசோதனையில் நெகட்டிவ் வந்தவர்களில் சிலர் அடுத்த சிலதினங்களில் நுரையீரல் பாதிப்பால்மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தாலும், சிடி ஸ்கேன் செய்து கொள்வது நல்லது” என்றனர்.