Published : 26 Sep 2015 08:14 am

Updated : 26 Sep 2015 08:14 am

 

Published : 26 Sep 2015 08:14 AM
Last Updated : 26 Sep 2015 08:14 AM

பள்ளிக்கரணையில் குப்பை கொட்டுவது தடுக்கப்படும்: சட்டப் பேரவையில் அமைச்சர் உறுதி

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குப்பை கொட்டுவது தடுத்து நிறுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் உறுப்பினர் க.பீம்ராவ், ‘‘அரிய வகை நுண்ணியிர்கள் வாழும் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனை தடுத்து நிறுத்தி அந்தப் பகுதியை பாதுகாக்க வேண்டும்’’ என துணை கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதிலளித்த அமைச்சர் வெங்கடாச்சலம், ‘‘பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மாநகராட்சி குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.



பள்ளிக்கரணைகுப்பை கொட்டுவது தடுக்கப்படும்சட்டப் பேரவையில் அமைச்சர் உறுதி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x