Published : 11 Oct 2020 10:41 AM
Last Updated : 11 Oct 2020 10:41 AM

உத்தரபிரதேச தலித் இளம்பெண் கொலை சம்பவத்தால் உலக அரங்கில் நமக்கு தலைக்குனிவு: திருமாவளவன் எம்பி குற்றச்சாட்டு

உத்தரபிரதேச தலித் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் சுதேசி மில் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டு உரையாற்றினார். அருகில் ரவிக்குமார் எம்பி. படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

உத்தரபிரதேசம் ஹாத்ரஸ் தலித் இளம்பெண் கொலை சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் சுதேசி மில் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் கலந்துகொண்டு கண்டன உரையாற் றினார். இதில் ரவிக்குமார் எம்பி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே நல்லிணக்கம் இல்லைஎன்ற தோற்றத்தை உருவாக்குவ தற்கு சிலர் திட்டமிட்டு வதந்தி களை பரப்பி வருகின்றனர். சில ஊடகங்கள் அதனை பெரிது படுத்துகின்றன. இன்னும் தேர்தலுக்கு பல மாதங்கள் உள்ள நிலையில்இப்போதே சின்னம் குறித்த விவாதத்தை நடத்துவது திமுக கூட் டணியை பலவீனப்படுத்துகின்ற ஒரு முயற்சி.

திமுக மட்டுமல்ல அதிமுகவும் கூட நிலையான சின்னம் இல்லாத கூட்டணி கட்சிகளை தங்களுடைய சின்னத்தில் போட்டியிடச் சொல்வது வழக்கமான ஒன்றுதான். அது நல்லெண்ணத்தின் அடிப்படையில் கேட்கிறார்கள் என்று தான் நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள், ஒடுக்க நினைக்கிறார்கள் என்கிற எதிர்மறையான நிலையில் நாங்கள் அதனை பார்க்கவில்லை.

பாஜக தனித்து போட்டி

திமுகவோடு பாஜக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்றுஅண்மையில் பொன்.ராதாகிருஷ் ணன் கூறினார். ஆகவே அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் கூட்டணி தொடராது என அவர் உணர்ந்துள்ளார். நான் தொடக்கத்தில் இருந்து சொல்லி வருகிறேன். அதிமுக, பாஜகவுடன் போகாது. பாஜக தமிழகத்தில் தனித்து போட்டி யிடும். அதனை உறுதிப்படுத்தும் விதமாக பொன்.ராதாகிருஷ்ணன் தன்னுடைய கருத்தை தெரிவித் துள்ளார்.

உ.பி அரசை

டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

உத்தரபிரதேசம் ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் உலக அரங்கில்நமக்கு தலைக்குனிவை ஏற்படுத்தி யுள்ளது. யோகி ஆதித்தியநாத் உ.பி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிரா கவும், தலித்துகளுக்கு எதிராகவும் வன் கொடுமைகள் அதிகரித்திருக் கின்றன.

காரணம் யோகி ஆதித்தியநாத் இப்படிப்பட்ட கொடுமைகளை குற்றச் செயலாக கருதிடாத உளவியலை கொண்டவர். ஆகவே அங்கு நடந்துள்ள சம்பவத்தை ஜன நாயக சக்திகள் தேசிய அளவில் கண்டித்தது ஒரு ஆறுதலை அளிக்கிறது. மோடி அரசும், யோகி அரசும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். யோகி அரசை, மோடி அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x