Published : 11 Oct 2020 07:26 AM
Last Updated : 11 Oct 2020 07:26 AM

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தலைமைச் செயலர் மற்றும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில், வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியில் தொடங்கஉள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் 47 சதவீதம் வரை மழை கிடைக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டும் அதேகாலகட்டத்தில் தொடங்க உள்ளது.

கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒக்கி, வார்தா, கஜா உள்ளிட்ட புயல்களால் தமிழகத்தில் அதிக அளவில்சேதங்கள் ஏற்பட்டன. இவற்றைகருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள், குடிமராமத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூர்வாரப்பட்டுள்ளன. பல இடங்களில் இப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதுதவிர, மாவட்ட ஆட்சியர்களுக்கு உதவியாக மாவட்டங்கள்தோறும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் தற்போது மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கரோனா ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் கடந்த29-ம் தேதி ஆலோசனை நடத்தியமுதல்வர் பழனிசாமி, பருவமழைமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார்.

மேலும், ‘‘பருவமழை தொடங்க உள்ளதால், முன்னதாகவே நகர்ப்புற, ஊரக பகுதியில் குடிநீர், சாலைவசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம்செலுத்தி, பருவ கால சவால்களைதிறம்பட கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்கவேண்டும். நீர்நிலை உள்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள்,கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்று முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைசெயலகத்தில் நாளை (அக்.12) நடக்க உள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கும் இக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் கே.சண்முகம், நிதி, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், மாவட்டங்களுக்காக நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்பார்கள் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x