‘அம்மா எனக்கு வேற வழி தெரியவில்லை..’- கடிதத்தில் விஷ்ணுபிரியா உருக்கம்!

‘அம்மா எனக்கு வேற வழி தெரியவில்லை..’- கடிதத்தில் விஷ்ணுபிரியா உருக்கம்!
Updated on
1 min read

‘எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. இதற்கு முழு பொறுப்பு நான் தான்’ என டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா இறப்பதற்கு முன் எழுதியதாகக் கூறப்படும் பத்து பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரத்தின் சுருக்கம்:

அம்மா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா. என் லைஃப்ல போய் இப்படி ஒரு நிலைமை வரும்னு எதிர்பார்க்கவில்லைமா. என் மனசாட்சியை கொன்னுட்டுதான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இது நான் மூன்றாவது முறை யாக தற்கொலைக்கு முயற்சிக்கும் நிகழ்வு. எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. இதற்கு முழு பொறுப்பு நான் தான். சாரி, அம்மா, அப்பா, அக்கா, சித்தப்பா, சித்தி. எனது இந்த முடிவால் நீங்க தான் வருத்தப்படுவீர்கள். உங்களை எல்லாம் ஏமாத்திட்டு போறதுக்கு சாரி, மன்னிச்சுடுங்க. ஐ லவ் யூ ஆல்.

காவல் துறைக்கு நான் பொருத் தமான ஆள் இல்லை என நினைக் கிறேன். அதனால், இனியும் யாருக்கும் காத்திராமல் இந்த முடிவை எடுக்கிறேன். என்னுடைய கடைசி வேண்டுகோள், எனது உடம்பை, போஸ்ட்மார்டம் (பிரேத பரிசோதனை) செய்த பின், எந்த பிரச்சினையும் செய்யாமல் எடுத் துக் கொள்ளுங்கள்.

காவல் துறையின் அனைத்து அதிகாரிகள், காவல் துறை நண்பர்களிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சாரி அம்மா நான் உனக்கு பண்ணனது துரோகம் தான். ஆனா எனக்கு வேற வழி தெரியவில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in