மகள் திருமணத்துக்காக வருங்கால வைப்பு நிதியில் பணம் கோரி நடத்துநர் வழக்கு: உரிய நிதியை உடனடியாக வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மகள் திருமணத்துக்காக வருங்கால வைப்பு நிதியில் பணம் கோரி நடத்துநர் வழக்கு: உரிய நிதியை உடனடியாக வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மகளின் திருமணச் செலவுக்காக தனது வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் கோரிய நடத்துநருக்கு இரண்டு வாரங்களில் உரிய தொகையை வழங்க அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலப் பொது மேலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலத்தில் நடத்துநராகப் பணியாற்றி வரும் துரைசாமி, தனது மகளின் திருமணச் செலவுகளுக்காக, தனது வருங்கால வைப்பு நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாயை விடுவிக்கக் கோரி, பொது மேலாளரிடம் மனு கொடுத்தார்.

ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து, துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. கரோனா ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்துக் கழகம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும், மனுதாரரின் கோரிக்கை மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதி, துரைசாமியின் வருங்கால வைப்பு நிதியில் இருந்து எவ்வளவு வழங்க முடியும் எனக் கணக்கிட்டு, 2 வாரங்களில் வழங்க போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in