

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பிறந்த நாளை கட்சியினர் சாலையில் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
பாமக இளைஞர் அணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸின் 52-வது பிறந்த நாள் விழாவைக் கட்சியினர் கொண்டாடினர். இதையொட்டி அலங்காநல்லூர் முனியாண்டி கோயிலில் பாமக சார்பில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.
இதில் நகரச் செயலாளர் செந்தில்குமார், மாவட்டத் தலை வர் அழகுராஜா, மாநில துணை பொதுச் செயலாளர் தேவர், மாநில இளைஞர் அணிச் செயலாளர் குரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர் சுற்றுப் பகுதிகளில் இருந்து 15-க்கும் அதிகமான வாகனங்களில் வந்த பாமகவினர், அலங்காநல்லூர் கேட்டுக் கடை சந்திப்பில் சாலையில் வைத்து கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடினர். அன்புமணியை வாழ்த்தி கோஷங் களை எழுப்பினர்.
விழா முடியும் வரை நான்கு சாலை சந்திப்புகளில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.