கரோனா தொற்று தற்காலிக தடுப்பு முகாம் முடிவுக்கு வந்ததால் தேவிகாபுரம் பள்ளியை தூய்மைப்படுத்தும் பணி சொந்த நிதியில் தலைமை ஆசிரியர் முயற்சி

தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் உள்ள தளவாட பொருட்களை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் உள்ள தளவாட பொருட்களை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தேவிகாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வந்த கரோனா தடுப்பு முகாம் முடிவுக்கு வந்ததும், சொந்த நிதியின் மூலம் பள்ளியை தூய்மைப்படுத்தும் பணியில் தலைமை ஆசிரியர் ஈடுபட்டுள்ளார்.

தி.மலை மாவட்டம் சேத்துப் பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் உள்ள அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளியில், கரோனா தொற்று தடுப்பு முகாம் செயல் பட்டது. வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து தி.மலை மாவட்டத்துக்கு திரும்பியவர் களை, முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக முகாமில் தங்க வைக்கப் பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 மாதங்களுக்கு பிறகு, மையத்தின் பயன்பாடு முடிவுக்கு வந்துவிட்டது.

இந்நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை நடத்தி வரு கிறது. இதையொட்டி, அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக பள்ளியை தயார் நிலையில் வைக்க, தனது சொந்த நிதியின் மூலம் தலைமை ஆசிரியர் சரவ ணன் நடவடிக்கை எடுத்துள்ளார். மாணவர்கள் பயன்படுத்தும் மேஜை மற்றும் இருக்கைகள், அலுவலக தளவாடப் பொருட் களுக்கு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது.

மேலும், பள்ளி வகுப்பறை களுக்கு வர்ணம் பூசும் பணியும் நடைபெறுகிறது. மாணவர் களின் பாதுகாப்புக்கு சமூக அக் கறையுடன் செயல்படும் தலைமை ஆசிரியரை அனைத்துத் தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in