Published : 10 Oct 2020 08:24 AM
Last Updated : 10 Oct 2020 08:24 AM

முதல்வர் பழனிசாமியுடன் எல்.முருகன் திடீர் சந்திப்பு

முதல்வர் பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று சந்தித்து பேசினார்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் உடனிருந்தார்.

சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, நடப்பு அரசியல் நிலவரங்கள், அதிமுக – பாஜக கூட்டணி, வேளாண் சட்டத்துக்கு தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் பேசியுள்ளனர்.

பிறகு செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறும்போது, ‘‘அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்காக அவருக்கு பாஜகசார்பில் வாழ்த்து தெரிவித்தோம். வேளாண் சட்டங்களை ஆதரித்ததற்காக நன்றி தெரிவித்தோம். கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய யூ-டியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறியவும் வலியுறுத்தினோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x