

வாலாஜாபாத் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்றுவந்த காவலர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார்(27), தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் அணி காவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த அக்.5-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில், சொந்த வேலையாக வடக்குப்பட்டிலிருந்து ஒரகடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த கார் மோதியதில் செல்வகுமார் பலத்த காயமடைந்தார்.
ஒரகடம் போலீஸார் செல்வகுமாரை சிகிச்சைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காவலர் செல்வகுமார், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.