

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வேயில் வழக்கமான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாத சூழலில், புதிய பாதைகள் அமைத்தல், இரட்டை பாதைகள், மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைப்பது போன்ற பணிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில் பிரிவில் வருவாயை அதிகரிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனால், தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில் போக்குவரத்து 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து தற்போது 20-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், கூடுதல் ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தால், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக அரசு அனுமதி அளித்தால்மட்டுமே வாரியத்தின் அனுமதியுடன் மின்சார ரயில்களின் சேவை தொடங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.