

கடலூர் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் மகனும், 15 நாள் கைக்குழந்தையாக தன் தாயுடன் சிறை வாசத்தை அனுபவித்தவருமான ‘செயில் வீரன்’ தனது 91 வது வயதில் காலமானார். அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுதந்திரப்போராட்ட வரலாற்றில் எட்டு முறை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர் தியாகி கடலூர் அஞ்சலை அம்மாள். இவர் கடந்த 1931 ஜனவரி 10-ம் தேதிகடலூரில் உப்பு எடுக்கும் போரட்டத்தில் ஈடுபட்டதற்காக 6 மாதகடு்ங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். நிறை மாதத்தில், பரோலில் வந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
சிறையில் இருந்து வந்த வுடன் குழந்தை பிறந்ததால் ‘செயில் வீரன்' என்று பெயர் சூட்டினார். அதன் பின் 15 நாள் கைக்குழந்தையுடன் சிறைக்குச் சென்று எஞ்சிய இரண்டு மாத தண்டனையை அனுபவித்தார்.
கடந்த 1933 ம் ஆண்டில் அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட அஞ்சலை அம்மாளுக்கு 3 மாத தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது கைக்குழந்தையாக இருந்த செயில் வீரனுடன் தான் வேலூர் சிறைக்குச் சென்றார். சிறு பருவத்திலேயே விடுதலை போராட்டத்துக்காக தாயுடன் இரு முறை சிறை சென்ற ‘செயில் வீரன்' பின்னாளில் தியாகிகள் உதவி்த்தொகை கேட்டு விண்ணப்பித்தார்.ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி ‘செயில் வீரன்'எனும் செயவீரனுக்கு தியாகிகள் உதவித்தொகை தர அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
கடலூர் முதுநகர் சுண்ணாம் புகார தெருவில் ‘செயில் வீரன்' என்கிற செயவீரன்(91) வசித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு புவனகிரி அருகே உள்ள தீத்தாம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்தார். அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
சிறையில் இருந்து வந்த வுடன் குழந்தை பிறந்ததால் ‘செயில் வீரன்' என்று பெயர் சூட்டினார். அதன் பின் 15 நாள் கைக்குழந்தையுடன் சிறைக்குச் சென்று எஞ்சிய 2 மாத தண்டனையை அனுபவித்தார்.