பக்ரீத் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட முடியவில்லை: கம்பம் இளைஞர் வேதனை

பக்ரீத் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட முடியவில்லை: கம்பம் இளைஞர் வேதனை
Updated on
1 min read

பக்ரீத் பண்டிகையை குடும்பத் தினருடன் சேர்ந்து கொண்டாட முடியவில்லை என கம்பம் இளைஞர் வேதனை அடைந்துள்ளார்.

கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் குவைத்தில் ஓட்டுநர் பணிக்கு அழைத்து செல்லப்பட்டு ஒட்டகம் மேய்த்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாப்ஸ்அப் வீடியோ பதிவைக் கண்டு ‘தி இந்து’ அவரை அரபுக்காரர்களிடம் இருந்து மீட்டது. இதனையடுத்து வரும் 26-ம் தேதி அவர் நாடு திரும்புகிறார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் நேற்று செல்போன் மூலம் சதாம் உசேன் பேசியது: கம்பத்தில் நான் லாரி டிரைவராக வேலை செய்து வந்தபோது கேரளம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்களுக்கு லாரியில் சரக்கு ஏற்றி செல்வோம். ஆனால் பண்டிகை காலங்களில் வீடு வந்து சேர்ந்து எனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். ஆனால் முதல்முறையாக இந்த ஆண்டு குவைத்துக்கு வேலைக்கு சென்ற காரணத்தினால் எனது குடும்பத்தினருடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாட முடியவில்லை என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது. அவர்களை பார்க்க ஆவலாக உள்ளேன்.

இன்று (நேற்று) காலை தொழுகை முடிந்ததும் எனது தந்தை, மனைவியிடம் செல்போனில் பேசி பக்ரீத் வாழ்த்து தெரிவித்தேன். குழந்தைகள் என்னை நினைத்து அழுவதாகத் தெரிந்துகொண்டேன். அவர்களு டன் பேச முயன்றேன். எனினும் பேச முடியவில்லை விரைவில் அவர்களை சந்திப்பேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in