சிலை திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

சிலை திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
Updated on
1 min read

சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள மிகவும் பழமையான 3 கோயில்களில் உள்ள 8 உலோக சிலைகள் திருடு போயின. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.77 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், மே மாதம் சென்னை மாம்பலம் அருகே திரைப்பட தயாரிப்பு நிறுவன மேலாளர் தனலிங்கம், அரசு அச்சக ஊழியர் கருணாகரன் ஆகியோரை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகர் கைது செய்யப்பட்டார். மேலும் போலீஸ் எஸ்ஐ ரவிச்சந்திரன், மாரி என்கிற மாரீசன் கோகுல் மற்றும் சாதிக் ஆகியோரும் இந்த கொள்ளை வழக்கில் சிக்கி பெங்களூரூ சிறையில் உள்ளனர். இவர்களை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துவர சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நங்கநல்லூரைச் சேர்ந்த ஆடிட்டர் ரவி என்ற சுப்பிரமணியத்தை போலீஸார் நேற்று கைது செய்தனர். சென்னை பெருநகர 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சிலைகளை முப்பையில் விற்பனை செய்வதற்கு இடைத்தரகராக செயல்பட்டவர்.

தேடுதல் வேட்டை

இவ்வழக்கில் முக்கிய புள்ளியான செங்குன்றம் ஜெயக்குமார், சபரிவாசன், தமீம், விஜயராகவன் மற்றும் சண்முகம் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். போலீஸார் அவர்களை தேடி வருகிறார்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in