Published : 08 Oct 2020 09:12 PM
Last Updated : 08 Oct 2020 09:12 PM

சிஎஸ்ஆர் நடவடிக்கைகள் குறித்த 2 நாள் கருத்தரங்கு: இணையத்தில் நாளை தொடங்குகிறது

கரோனா தொற்று நெருக்கடியில் உள்ள சூழலில் நிறுவனங்கள் முன்னெடுக்கும் சிஎஸ்ஆர் என்ற மக்கள்நலத் திட்டங்கள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கை சிஎஸ்ஆர் ஸ்பார்க் நிறுவனம் நடத்த உள்ளது.

அக்டோபர் 9 மற்றும் 10 தேதிகளில் இரண்டு நாட்கள் இணையத்தில் நடைபெற உள்ள இந்தக் கருத்தரங்கு காணொலி மூலமாக நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கில் சிஎஸ்ஆர் சட்டத்தின் சிக்கல்கள், அதில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஆகியவை குறித்து நிபுணர்கள் விளக்கமாகப் பேச உள்ளனர்.

மேலும் ஐநாவின் நீடித்த அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்தும், சுயசார்பு பாரதம் என்ற லட்சியத்தை அடைவதில் சிஎஸ்ஆர் பங்களிப்பு குறித்தும் கலந்தாய்வு நடக்க உள்ளது.

REACHA அமைப்பின் தலைமை அபிவிருத்தி அதிகாரி நிகில் பண்ட், ஹாஃபன்சாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ பிரபுசேகர் மற்றும் சிஎஸ்ஆர் ஸ்பார்க் அமைப்பின் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் இந்த மாநாட்டின் முக்கிய உரையாளர்களாக இருக்கிறார்கள்.
இந்த இரண்டு நாள் கலந்தாய்வில் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் தலைமை அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், மாநில அரசு நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https://pages.razorpay.com/csrspark2020 என்ற இணையதளத்தில் இதற்கான கட்டணம் ரூ.250 செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x