

அதிமுகவில் புதிதாக நியமிக் கப்பட்டுள்ள வழிகாட்டும் குழுவில், மதுரை மாவட்டத்தில் 2 பேரும், தென் மாவட்டங்களில் மொத்தம் 4 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு அதி முக சார்பில் முதல்வர் வேட் பாளராக, தற்போதைய முதல் வர் கே.பழனிசாமி அறிவிக் கப்பட்டுள்ளார். அத்துடன் அதிமுகவுக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் இடம் பெற்றுள்ளனர். சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ. மாணிக்கம், முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் இக்குழுவில் இடம் கிடைத்துள்ளது. சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது, அவருக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தவர்கள் இந்த 2 பேர். இதனால் ஓபிஎஸ் சிபாரிசின் அடிப்படையில் 2 பேரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.சீனிவாசன், நெல்லை மாவட்ட முன்னாள் எம்பி. பி.ஹெச். மனோஜ்பாண்டியனும் இடம் பெற்றுள்ளனர். 10 தென் மாவட்டங்கள் சார்பில் 4 பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் மட்டும் 2 பேர் இக்குழுவில் இடம் பெற்றது குறித்து அதிமுகவினர் கூறியதாவது: தர்மயுத்தம் தொடங்கியபோது, 2 பேரும் பதவியில் இருந்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளித்தது, ஓபிஎஸ்ஸுக்கு பெரிய பலமாக இருந்தது. தொடர்ந்து அவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.
2014 மக்களவைத் தேர்தலில் கோபாலகிருஷ்ணனுக்கு எம்பி சீட் ஓபிஎஸ் ஆதரவால்தான் கிடைத்தது. எனினும் கடந்த மக்களவைத் தேர்தலில் கோபால கிருஷ்ணனுக்கு ஓபிஎஸ்ஸால் சீட் வாங்கித்தர முடியவில்லை.
இந்தக் குறையைப் போக்க மதுரை மேயர் சீட் வாங்கித் தருவதாக ஓபிஎஸ் உறுதி அளித்திருந்தார்.
மேலும், மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர்தான் அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.
இவர்கள் யாரும் ஓபிஎஸ்ஸுக்கு நம்பகத்தன்மையான ஆதரவாளர் களாக இல்லை. இவர்கள் யாருடனும் கோபாலகிருஷ்ணன் ஒட்டாமல், ஓபிஎஸ் பக்கமே இருந்து வருகிறார். அவருக்கு முதல்வர் தரப்பிலிருந்தும் முக்கிய ஆதரவாளர்கள் யாரும் நெருக் கமாக இல்லாததும் முக்கியக் காரணம்.
கடந்த மக்களவை தேர்தலில் தான் வேட்பாளராக அறிவிக்கப் படாதது முதல் தற்போது வரையில் கட்சி நிகழ்ச்சிகள், பணிகளில் ஈடுபடாமல் கோபாலகிருஷ்ணன் பெரும்பாலும் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையிலும், அவருக்கு வழிகாட்டும் குழுவில் இடம் கிடைத்துள்ளதென்றால் ஓபிஎஸ்தான் முழு காரணம். பாஜகவில் நெருக்கமான தொடர்பு வைத்துள்ள கோபாலகிருஷ்ணன், அந்த வாய்ப்பையும் பயன்படுத்தி இருப்பார்.
மாணிக்கம் எம்எல்ஏ ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தாலும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பக்கமும் இருந்தார். ஓபிஎஸ் சார்பில் எம்எல்ஏ அந்தஸ்தில் வழிகாட்டும் குழுவில் இடம் பெற்றவர் மாணிக்கம் ஒருவர்தான். இவருக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கிடைக்க உதவியவர் ஓபிஎஸ். உதயகுமார் ஆதரவும் மாணிக்கத்துக்கு இருந்ததால் இந்தக் குழுவில் இடம் கிடைத்துள்ளது. இவர்கள் சார்ந்த சமூகமும் ஒரு காரணம்.
2 பேருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது உள்ளூர் கட்சி நிர்வாகிகளிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இவர்கள் நிய மனம் மதுரை அதிமுகவில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது வருங்காலத்தில் இவர்களின் செயல்பாட்டைப் பொருத்தே தெரியவரும்’ என்றனர்.