

மதுரை மாநகராட்சியில் பல இடங்களில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் வைகை அணை குடிநீர்த் திட்டம்-1, திட்டம்-2 மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கிடைக்கும் குடிநீர் பொதுமக்களுக்கு விநி யோகம் செய்யப்படுகிறது.
அனைத்து வார்டுகளிலும் போடப்பட்ட குடிநீர் குழாய்கள் தற்போதைய மாநகராட்சி, நகராட்சியாக இருந்த போது பதிக்கப்பட்டவை. அதன் பிறகு, புதிய குழாய்கள் மாற் றப்படவில்லை. பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில், 100 வார்டு களிலும் உள்ள பழைய குடிநீர் குழாய்களை மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒரு சில வார்டுகளில், பழைய குடிநீர் குழா ய்களை மாற்றும் பணி தொடங்கி உள்ளது.
குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் குழாய்களுடன், பாதாள சாக்கடை குழாய்களும் இணையாகச் செல்கிறது. பாதாள சாக்கடைக் குழாயில் விரிசல் ஏற்பட்டு கசிவு ஏற்படும்போது அந்த கழிவுநீர் குடிநீருடன் கலந்து விடுகிறது. மேலும், தற்போது மாநகராட்சியில் பல வார்டுகளில் புதிதாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியும், சேதமடைந்த பாதாள சாக்கடை குழாய்களைச் சீரமைக்கும் பணி களும் நடக்கின்றன.
இப்பணிகள் தரமாக நடக் காததால் கழிவுநீர் குடிநீருடன் கலக்கிறது.
புறநகர் வார்டுகளில் நகராட்சி, பஞ்சாயத்துடன் இருந்தபோது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் தரமாக இல்லாததால் உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கலக்கிறது. அதை மாநகராட்சி அதிகாரிகளால் நிரந்தரமாகச் சரி செய்ய முடியவில்லை.
அதனால், தற்போது பெரும்பாலான வார்டுகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. கரோனா பரவும் காலத்தில் ஏற்கெனவே நோய்த் தொற்று அச்சத்தில் வாழும் மக்களை இது மேலும் அச்சமடையச் செய்துள்ளது.
இதுகுறித்து 76-வது வார்டு பழங்காநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்த தமிழரசி கூறியதாவது: முன்பு எப்போதாவது குடிநீருடன் கழிவுநீர் கலந்து வரும். ஆனால் தற்போது தொடர்ந்து அவ்வாறு வருகிறது. அந்த தண்ணீரை சமையலுக்கும், குடிக்கவும் பயன் படுத்த முடியவில்லை.
இதனால் லாரிகளில் வரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். இதுகு றித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து விட்டோம். ஆனால், இதுவரை சரிசெய்யவில்லை என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சில இடங்களில் பாதாள சாக் கடைக் குழாயில் கசிவு ஏற்பட்டு இருக்கலாம். புகார் வந்தால் உடனே சரி செய்யப்படும். பெரியாறு குடிநீர் திட்டத்துக்காக அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய்கள் மாற்றப்படுகின்றன என்றார்.