

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும், கடந்த காலங்களில் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் போன்ற அதிமுக அரசின் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்கு வரவேற்பு அளித்து வந்துள்ளது. ‘எடப்பாடி பழனிசாமி முதல்வரானது அதிசயம்’ என ரஜினிகாந்த் ஒரு விழாவில் குறிப்பிட்டபோது, அவரது பேச்சு ஆணவத்தை வெளிப்படுத்துவதாக கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமிஅறிவிக்கப்பட்டுள்ளதற்கு கொமதேக வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்ற முதல்வர் பழனிசாமிக்கு கொமதேக சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.