‘திருவள்ளுவர் இளைஞர் அமைப்பில் 2 லட்சம் மாணவர்கள்’

‘திருவள்ளுவர் இளைஞர் அமைப்பில் 2 லட்சம் மாணவர்கள்’
Updated on
1 min read

திருவள்ளுவர் இளைஞர் அமைப்பு தொடங்கப்பட்ட சிறிது காலத்திலேயே 2 லட்சம் மாணவர்கள் இணைந்துள்ளனர் என்று பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஆட்சிக் குழு வின் 2-வது துணைக் குழுக் கூட்டம், உதகையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக எம்.பி. தருண் விஜய், செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மிகப் பெரிய குருவான திருவள்ளுவருக்கு, ஹரித்வார் கங்கை நதிக் கரையில் பிரம் மாண்ட சிலை அமைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. ஹரித்வாருக்கு லட்சக் கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வரு கின்றனர். அவர்களுக்கு திரு வள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்து அறிய வாய்ப்பு ஏற்படும்.

தற்போதுதான் திருவள்ளுவர் என்ற சொல்லை வட மாநிலத்த வர் சரியாக உச்சரிக்க கற்றுக் கொண்டுள்ளனர். வாரணாசியில் அமைக்கப்பட்டுவரும் சுப்பிர மணிய பாரதி இல்லம், பாரம்பரிய சின்னமாக விளங்கும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in