

அனைத்து அரசு மருத்துவமனை களில் பிறக்கும் குழந்தைகளுக் கும் உடை, கொசு வலை, சோப் உட்பட 16 பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகம் வழங்கப் பட்டு வருகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகளுக்கு பெட்டகம் வழங்கும் விழா மருத்துவ மனையில் நேற்று நடந்தது. மருத்துவமனை டீன் நாராயணபாபு தலைமை தாங்கினார். மருத்துவக் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, ஆர்எம்ஓ ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 16 குழந்தைகளின் தாய்மார்களிடம் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.
இந்த மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதியில் இருந்து 13-ம் தேதி நள்ளிரவு வரை பிறந்த 67 ஆண் குழந்தைகள், 52 பெண் குழந்தைகள் என மொத்தம் 119 குழந்தைகளுக்கு நேற்று பெட்டகம் வழங்கப்பட்டது.
திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவ மனையில் கடந்த 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பிறந்த 136 குழந்தைகளுக்கு பரிசுப் பெட்ட கத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சமூகநலத் துறை அமைச்சர் பா.வளர்மதி, கைத்தறித் துறை அமைச்சர் கோகுல இந்திரா நேற்று வழங்கினர்.