கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுடன் இருப்பவர்கள் உறங்க வசதியாக 100 சிறப்புக் கட்டில்கள்

உள்நோயாளிகளுடன் இருப்பவர்கள் அமர்ந்துகொள்ளவும், உறங்கவும் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ள கட்டில்.
உள்நோயாளிகளுடன் இருப்பவர்கள் அமர்ந்துகொள்ளவும், உறங்கவும் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ள கட்டில்.
Updated on
1 min read

கோவை அரசு மருத்துவமனை எலும்பு முறிவுப் பிரிவில் உள்நோயாளிகளுடன் இருப்பவர்கள் உறங்க வசதியாக 100 சிறப்புக் கட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை அரசு மருத்துவமனையின் எலும்பு முறிவுப் பிரிவில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களைப் பார்த்துக் கொள்பவர்கள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் அமர தனியே படுக்கை வசதி இல்லாததால், இரவு நேரங்களில் நோயாளியின் கட்டிலுக்கு அருகே தரையில் படுத்து உறங்கி வந்தனர். இதைக் கருத்தில் கொண்டு தன்னார்வலர்களின் உதவியுடன் உடன் இருப்பவர்கள் அமர்ந்துகொள்ளவும், படுத்துக்கொள்ளவும் ஏற்ற வகையில் கட்டில்கள் வாங்கப்பட்டுள்ளன.

கோவை அரசு மருத்துவமனையின் டீன் பி.காளிதாஸ் முன்னிலையில் இந்தக் கட்டில்கள் இன்று (அக். 07) ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து மருத்துவமனையின் முட நீக்கியல், விபத்து கிசிச்சைத் துறை இயக்குநர் வெற்றிவேல் செழியன் கூறுகையில், "எலும்பு முறிவுப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் சிகிச்சைக்காக சில வாரங்கள் தங்கி இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, உள் நோயாளிகளை உடன் இருந்து கவனித்துக்கொள்பவர்கள் இரவில் படுத்துறங்கும் வகையில் ஆறு அடி நீளமும், இரண்டு அடி அகலமும், ஒன்றரை அடி உயரமும் கொண்ட 100 சிறப்புக் கட்டில்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டன.

இந்தக் கட்டில்களைக் காலை நேரத்தில் நோயாளிகளின் கட்டிலுக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம் என்பதால் இடப்பற்றாக்குறை ஏற்படுவது இல்லை. மாலை நேரத்தில் நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் அமர்ந்து பேசுவதற்கும் இது உதவியாக உள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in