

தென்காசி மாவட்டத்தில் ஆலங் குளம், தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாட தனியாக விளையாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்கள் பலர் தங்கள் குழந்தை களுடன் வருகின்றனர். காவல் நிலையத்தைக் கண்டு குழந்தைகள் மிரட்சி அடையாமல் வீட்டில் இருப்பதுபோல் இயல்பாக இருப்பதற்காக இந்த விளையாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு அறையை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் திறந்துவைத்தார். தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார்.
புளியங்குடி பகுதியில் குற்றச் செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வசதியாக முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. புளியங்குடி காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை எஸ்பி தொடங்கிவைத்தார்.