Published : 07 Oct 2020 09:55 AM
Last Updated : 07 Oct 2020 09:55 AM

வேளாண் கல்லூரி பல்வகை பயிர் பூங்காவில் புதிய ரகங்கள் சாகுபடி: மகசூலை விவசாயிகள் பார்வையிட ஏற்பாடு

மதுரை வேளாண் கல்லூரியில் புதிதாகப் பல்பயிர் பூங்கா தொடங்கப்பட்டு அதில் புதிய பயிர் ரகங்களை சாகுபடி செய்து கூடுதல் மகசூலை விவசாயிகள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை வேளாண் பல்கலைக் கழகம் ஆண்டுதோறும் புதிய பயிர் ரகங்களை வெளியிடும். அப்பயிரின் விதைகள் தமிழகம் முழுவதும் வேளாண் அறிவியல் நிலையங்களில் விவசாயிகளுக்கு விற்கப்படும். அதற்கான சாகுபடி தொழில்நுட்பங்கள், ஆலோச னைகளை அங்குள்ள வேளாண் வல்லுநர்கள் வழங்குவார்கள்.

அந்தப் பயிர் ரகங்களைப் பயிரிட்டு, அதன் சாகுபடித் தொழில்நுட்பம், மகசூலை விவசா யிகளுக்கு நேரடியாகச் செயல் விளக்கம் அளிப்பது கிடையாது. தற்போது முதன்முறையாக வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்யும் புதிய பல்வகை பயிர் ரகங்களைக் குறிப்பிட்ட பரப்பளவில் சாகுபடி செய்து, அதில் கிடைக்கும் மகசூலை விவசாயிகளிடையே பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலைய வேளாண் பண்ணையில் பல்பயிர் பூங்கா தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் சமீபத்தில் வெளியிட்ட ரகங் கள், சூரியகாந்தி (கோஎச்-3), நிலக்கடலை (டிஎம்வி-14), பாசிப்பயறு (விபிஎன்4), தட்டைப்பயறு (விபிஎன்-3), தீவன தட்டைப்பயறு (கோ9), வரகு (டிஎன்ஏயூ 86), சோளம் (சிஓ32) போன்றவை பரிந்துரைக்கப்பட்ட சாகுபடி முறைகளைக் கொண்டு பயிரிடப்பட்டுள்ளது.

வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செல்வி ரமேஷ், தொழில்நுட்ப வேளாண் வல்லுநர் பேராசிரியர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கூறிய தாவது:

மதுரை வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளுடன் விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், வேளாண் விரி வாக்கப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் இந்தப் பல் பயிர் பூங்காவில் சந்தித்து சாகுபடி தொழில்நுட்பங்களான பயிர் சாகுபடி, நிலம் தயாரிப்பு, விதை அளவு, விதைக்கும் இடைவெளிகள், உரம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை பார்த்தும், கேட்டும் தெரிந்துகொள்ளச் செய்வதே இந்தப் பூங்கா அமைப்பதன் முக்கிய நோக்கமாகும்.

பருவத்துக்கேற்ற பயிர் ரகத்தைத் தேர்வு செய்து பரிந்துரைக்கப்பட்ட சாகுபடி முறைகளைக் கொண்டு இந்தப் பல் பயிர் பூங்காவில் பயிர் சாகுபடி செய்து அதில் அதிக மகசூல் பெறுவது எப்படி என்பதை விவசாயிகளுக்கு நேரடி யாகச் செயல்விளக்கம் செய்து காட்டுவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

தற்போது வேளாண் பல்க லைக்கழகம் அறிமுகம் செய்த புதிய பல்வகைப் பயிர் ரகங்கள், மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிவியல் நிலைய பல் பயிர்ப் பூங்காவில் பயிரிடப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்தப் பூங்காவைப் பார்வையிட வரலாம். அதில் பயிரிட்டுள்ள ரகங்களையும், அதன் பயன் களையும் தெரிந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x