

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவிலில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
6 ஆண்டுகள் பாஜகவின் தேசிய செயலாளராக பதவி வகித்துவிட்டேன். எனக்கு வேறுஒரு பதவியை கட்சி வழங்கும். அது, உட்கட்சி விவகாரம். அதைபற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது. பிரிந்து கிடந்த அதிமுக அணிகளை இணைத்ததாக பிரதமர்மோடி ஒருபோதும் கூறியதில்லை.
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் இனிமேல் ஆட்சிக்கு வர முடியாது என்பதால்தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை குப்பையில் தூக்கி எறிவோம் என ராகுல் காந்தி கூறி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.