Published : 07 Oct 2020 07:21 AM
Last Updated : 07 Oct 2020 07:21 AM

ரத்த தானம் செய்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்: சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெருமிதம்

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரத்த தான விழிப்புணர்வு பதாகைகளை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப் உடன் உள்ளனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை

தேசிய தன்னார்வ ரத்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரத்ததான விழிப்புணர்வு பதாகைகளை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். மேலும் எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மெய்நிகர் அரட்டை பலகை சேவை மற்றும் ரத்த பரிமாற்று சேவைகளில் வளர்ந்து வரும் சவால்களை பற்றிய இணையவழி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அப்போது, செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்தியாவிலேயே ரத்த தானத்தில் தமிழகம் முதல்இடத்தில் உள்ளது. கரோனாதொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்வது அதிகரித்துள்ளது. சென்னையில் கரோனா தொற்றுபரவல் கட்டுக்குள் உள்ளது. கரோனா தொற்று இறப்பு சதவீதம்1.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பின்னர் அமல்படுத்தப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x