Published : 07 Oct 2020 07:12 AM
Last Updated : 07 Oct 2020 07:12 AM

தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார்- அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

சென்னை

தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

சென்னையில் எழுதுபொருள் அச்சகத் துறை குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை போன்ற வடிவமைப்பில் ரூ.58.67 கோடியில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முடிந்து ஒரு வாரத்தில் அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மக்கள் பார்வைக்கு இந்த நினைவிடம் திறக்கப்படும்போது, நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் பிரம்மாண்டமான நினைவிடமாக இருக்கும். நவீன தொழில்நுட்பத்தில் அருங்காட்சியகமும் இதில் அமைகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ‘தமிழகத்தில் எப்போது திரையரங்கங்கள் திறக்கப்படும்?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், ‘‘திரையரங்கத்தை பொறுத்தவரை டிக்கெட் வாங்கியது முதல், உள்ளே படம் பார்த்து வெளியில் வரும் வரை 3 மணிநேரம் ஒரே இடத்தில் இருக்க வேண்டியுள்ளது. எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, தமிழக சுகாதாரத் துறையுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவை முதல்வர் அறிவிப்பார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x