உடல்நல குறைவு ஏற்பட்டதால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

உடல்நல குறைவு ஏற்பட்டதால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மியாட்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த செப்.22-ம் தேதி கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், 29-ம் தேதி அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவரும் இதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த இருவரும் கடந்த 2-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இந்நிலையில், நேற்று இரவு விஜயகாந்துக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரு கின்றனர்.

வதந்திகளை நம்ப வேண்டாம்

தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “விஜயகாந்த் இரண்டாம் கட்டபரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம். விஜயகாந்த்
நலமுடன் உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in