

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழக சட் டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என மத்திய நெடுஞ்சாலை, கப்பல் துறை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலா லயத்தில் பிரதமர் நரேந்திர மோடி யின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் இனிப்பு வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வ தேச விசாரணை நடத்த அமெ ரிக்கா போன்ற நாடுகளுடன் இணைந்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு ஆய்வு செய்து விரைவில் முடிவு எடுக்கும்.
ஈழத் தமிழர்களை இனப்படு கொலை செய்த போர்க்குற்ற வாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண் டும் என்பதே பாஜகவின் நிலைப் பாடு. தமிழர்களின் நலன்களை கருத்தில்கொண்டு மத்திய பாஜக அரசு முடிவெடுக்கும்.
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் தந்தாக வேண்டும். தேவைப்பட்டால் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடும். இவ்வாறு பொன்.ராதாகிஷ்ணன் கூறினார்.