Last Updated : 06 Oct, 2020 04:23 PM

 

Published : 06 Oct 2020 04:23 PM
Last Updated : 06 Oct 2020 04:23 PM

புதுச்சேரி விடுதலை நாள் விழா; ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி விடுதலை நாள் விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்கள் பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்திலிருந்து 1954-ம் ஆண்டு நவ.1-ம் தேதி விடுதலை பெற்றன. அதனடிப்படையில், ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு சார்பில் நவ.1-ம் தேதி தேசியக் கொடி ஏற்றி விடுதலை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக். 6) நடைபெற்றது. இதில் துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ் (வருவாய்), எஸ்.பாஸ்கரன் (பேரிடர் மேலாண்மை), தெற்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளர் கே.எல்.வீரவல்லபன் மற்றும் தொடர்புடைய பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆட்சியர் அர்ஜூன் சர்மா பேசுகையில், "நிகழாண்டு விழா காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெறும். காவல்துறை அணிவகுப்பு மட்டும் நடைபெறும். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவர்கள் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் இடம்பெறாது.

தனிமனித இடைவெளியுடன் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய துறையினர் மேற்கொள்ள வேண்டும். தியாகிகள், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும். கொடியேற்ற நிகழ்வுக்குப் பிறகு தியாகிகள் கவுரவிக்கப்படுவார்கள்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x