

தேனி வடக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தங்க.தமிழ்ச்செல்வன் தனது சொந்தத் தொகுதியான ஆண்டிபட்டியை விட்டுவிட்டு வரும் சட்டப்பேரவைத் தேர் தலில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்துப் போடி தொகுதியில் போட்டியிட ஆயத்த மாகி வருகிறார்.
தேனி மாவட்ட திமுக, நிர் வாக வசதிக்காக அண்மையில் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி தேனி தெற்கு மாவட்டத்தில் கம்பம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளும், வடக்கு மாவட்டத் தில் பெரியகுளம்(தனி), போடி தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
தெற்கு மாவட்டத்துக்கு கம்பம் என்.ராமகிருஷ்ணனும், வடக்கு மாவட்டத்துக்கு தங்க. தமிழ்ச்செல்வனும் பொறுப்பாளர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தங்க.தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு 2001, 2011, 2016-ம் ஆண்டுகளில் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.
2001-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா போட்டி யிடுவதற்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அதற்குப் பின் இத்தொகுதியில் இவரது செல்வாக்கு உயர்ந்தது.
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப் பின் டிடிவி தினகரன் அணிக்குச் சென்றதால் எம்எல்ஏ பதவியை இழந்தார். பின்னர் அமமுக சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அதற்குப் பின் டிடிவி தின கரனுடன் ஏற்பட்ட மனக் கசப்பால் திமுகவில் சேர்ந்த தங்க.தமிழ்ச்செல்வனுக்கு மாநில அளவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் திமுகவை வலுப் படுத்த வேண்டும் என்பதோடு, அதிமுகவின் முக்கியப் புள்ளியான ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட வசதியாக தங்க.தமிழ்ச்செல்வனை திமுக தலைமை தேனி மாவட்ட (வடக்கு) பொறுப்பாளராக நியமித்தது.
திமுகவில் தற்போது பிரிக்கப்பட்ட வடக்கு மாவட் டத்தில் போடி தொகுதி வருகிறது. இதனால் இவர் தனது சொந்தத் தொகுதியான ஆண்டிபட்டியில் போட்டியிடாமல் போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்துப் போட்டியிட ஆயத்த மாகி வருவதாக தகவல் வெளி யாகியுள்ளது. அதற்காகத்தான் திமுக மேலிடமே ஆண்டிபட்டி தொகுதி உள்ள தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வனை நியமிக்காமல், போடி தொகுதி இடம்பெற்றுள்ள வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமித்துள்ளதாகக் கூறப்படுகி றது.
இது குறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சித் தலைமையின் உத்தரவின் பேரில் போடி தொகுதியில் போட்டியிட தங்க.தமிழ்ச் செல்வன் தயாராகி வரு கிறார்.
வடக்கு மாவட்டத்துக்குள் போடி தொகுதி வருவதால் மாவட்டப் பொறுப்பாளராக இருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தேர்தல் வேலையைப் பார்க்க வசதி யாக இருக்கும். அதற்கான ஏற்பாடுகளை இப்போதிருந்தே செய்து வருகிறோம், நிச்சயம் போடி தொகுதியில் திமுக வெற்றி பெறும், என்று கூறினார்.