

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை குழுவில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சிகளும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளன,
இலங்கை போர்க்குற்றங் கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் தமிழர்களின் மனக் காயங்களுக்கு மருந்தாக அமைந்துள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:
இந்தத் தீர்மானம் ஏழரைக் கோடி தமிழர்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளது. இதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரலாறு வாழ்த்து சொல்லும். இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு சர்வதேச விசாரணைக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றிய தீர் மானத்தை தமாகா வரவேற்கிறது. இது இலங்கைத் தமிழர்கள் உள் ளிட்ட ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. இலங்கைக்கு ஆதரவாக அமெ ரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றி யிருப்பது கண்டிக்கத்தக்கது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திராவிடர் கழகம் வரவேற்கிறது. இதற்காக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அனைத்துக் கட்சித் தலை வர்களையும் பாராட்டுகிறோம். இந்தத் தீர்மானம் செயல்வடிவம் பெறும்வரை முதல்வர் ஜெய லலிதாவும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஓய்ந்து விடக் கூடாது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:
உலகெங் கும் வாழும் தமிழர்களின் உணர்வு களைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த கோரி சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இந்த தீர்மானத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார்:
சட்டப் பேரவையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறை வேற்றிய முதல்வர் ஜெய லலிதாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வு களை வெளிப்படுத்தும் இந்த தீர்மானத்தை மதித்து சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்:
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்டோர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்றுள்ளனர்.