

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று மாலை சந்தித்த முதல்வர் பழனிசாமி, கரோனா தடுப்பு, சட்டம்-ஒழுங்கு குறித்த அறிக்கை அளித்ததுடன், அண்ணா பல்கலைக்கழகம் பிரிப்பு தொடர்பான சட்ட மசோதா மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பிரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மார்ச் 24-ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊர டங்கு தற்போது 9-வது கட்டமாக அக்.31-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. கடந்த செப்.1-ம் தேதி முதல் இ-பாஸ் முறை ரத்து செய் யப்பட்டதுடன், பொது போக்குவரத் துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள் ளது. இதன் காரணமாக, சொந்த ஊர் சென்றவர்கள், சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதேபோல், சென்னையில் இருந்து பலர் வெளியூர்களுக்குச் செல்கின் றனர். இதனால், சென்னை உள் ளிட்ட 15 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையில், மாதம்தோறும் கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, முதல்வர் பழனிசாமி அறிக்கை அளிப்பதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்து வருகிறார்.
அந்த வகையில், நேற்று 6- வது முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனி சாமி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், டிஜிபி ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் இருந்தனர்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள், அடுத்த கட்டமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், பிரதமரிடம் கோரியுள்ள நிதி உள்ளிட்டவை குறித்த அறிக் கையை அளித்ததுடன், நிலவரங் களையும் ஆளுநருக்கு முதல்வர் விளக்கினார். மேலும், சட்டம்- ஒழுங்கு குறித்த விவரங்களையும் அளித்தார்.
நிலுவையில் மசோதாக்கள்
முன்னதாக, தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் என்ற அமைப்புகள் உருவாக்கு வது குறித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப் புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர, முதல்வர் பழனிசாமி 110- விதியின் கீழ், வேலூர் திரு வள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து, விழுப்புரத்தில் புதிய பல் கலைக்கழகம் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
அதேபோல், நீட் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும்போது அவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அதுவும் ஆளுநரிடம் ஒப்புதலுக் காக உள்ளது.
பல்கலைக்கழகங்களின் வேந்த ரான ஆளுநரிடம் அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித் தும் விழுப்புரத்தில் புதிய பல் கலைக்கழகம் உருவாக்குவதற் கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மருத்துவக்கல்வியில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு உள்ளிட்ட சில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.