

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் 11-வது மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம், மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவர் டாக்டர் இளங்கோவன் தலைமையில் மன்னார்குடியில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், அதன் மாநிலப் பொதுச் செயலாளர் முனைவர் இரா.காமராசு பேசியதாவது: மன்னார்குடியில் செப்டம்பர் 11, 12, 13-ம் தேதிகளில் நடைபெறும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில மாநாட்டில், தமிழகத்தை சீரழிக்கும் மதுக் கலாச்சாரத்தையும், சாதிய மோதல்களையும், அதனால் ஏற்படும் கவுரவக் கொலைகளையும் தடுத்து நிறுத்தும் வகையிலான பிரச்சாரத் திட்டம் வகுக்கப்படவுள்ளது.
அதேபோல, நீதிமன்றத்திலும், மத்தியிலும் தமிழை ஆட்சி மொழியாகவும், நிர்வாக மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் அறி விப்பதற்கு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
பன்மைத் தன்மை கொண்ட இந்தியாவில் சாதிய, மதவாத மேலாதிக்கம் தலைதூக்கி வருவ தற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி, வலுவான கட்ட மைப்பை உருவாக்கிடவும், கருத்து ரிமையை பாதுகாப்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப் படவுள்ளது. செப்டம்பர் 12-ம் தேதி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மக்கள் கலைவிழா நடைபெறவுள்ளது.