பார்களில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? - திடீர் ஆய்வுக்கு கிரண்பேடி உத்தரவு

பார்களில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? - திடீர் ஆய்வுக்கு கிரண்பேடி உத்தரவு
Updated on
1 min read

மது அருந்தும் கூடங்களில் விதி முறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய கலால் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதை வீடியோ வில் பதிவு செய்ய வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று வெளியிட்டஉத்தரவு தொடர்பாக வாட்ஸ் அப்பில் தெரிவித்துள்ளதாவது:

வாழ்வாதாரத்திற்கான கூடுதல் வழிகள் மேலும் திறக்கப்படுகின்றன. கரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, சுகாதாரத்தை பேணுதல் மிக முக்கியம். நெரிசலான கூட்டங்களும் தொற்றை பரப்ப முக்கிய காரணமாக உள்ளதால் எச்சரிக்கையாக இருங்கள். புதுச் சேரி அரசு நிர்வாகம் தொற்று சோத னைகளை அதிகளவில் செய்கிறது. அறிகுறி இருந்தால் முன்கூட்டியே மருத்துவமனையை நாடுங்கள்.

தற்போது மது அருந்தும் கூடங்கள் (பார்கள்) திறக்கப்பட் டுள்ளன. விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை கண்டறிய கலால்துறையினர் திடீர் சோதனைகள் செய்ய வேண்டும். சோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இது சட்ட நடவடிக்கைக்கு உதவியாக இருக்கும். விதிமுறைகளை கடைபிடிப்பதில் அனைவரும் ஒத்து ழையுங்கள்.

கரோனா தொற்றின் இரண்டா வது அலையை நாம் தடுக்க வேண்டும். அனைத்து அரசு துறைகளும் இத்தடுப்பில் பங்கு வகிக்க வேண்டும். ஒரு தவறு மேலும் பல இறப்புகளுக்கும், அதிகமான சிகிச்சை தேவையையும் கொண்டு வர வாய்ப்பை உருவாக்கிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விதிமுறைகளை கடைபிடிப்பதில் அனைவரும் ஒத்துழையுங்கள். கரோனா தொற்றின் இரண்டாவது அலையை நாம் தடுக்க வேண்டும். அனைத்து அரசு துறைகளும் இத்தடுப்பில் பங்கு வகிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in