பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் மாற்றம் ஏற்படும்: நயினார் நாகேந்திரன் உறுதி

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் மாற்றம் ஏற்படும்: நயினார் நாகேந்திரன் உறுதி
Updated on
1 min read

“சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்” என்று பாஜக தென்மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே சுதந்திர போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரனின் 117-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. பாஜக தென்மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் திருப்பூர் குமரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வாடினாலும் இந்தியாவின் சுதந்திரத்துக்காக கடைசி வரை போராடி உயிர்நீத்தவர் கொடி காத்த குமரன். அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர் மோதல் என்பது அவர்கள் கட்சி சம்பந்தப்பட்ட விஷயம். அதைப் பற்றி கருத்து கூற முடியாது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் நிகழும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in