

தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு எந்த தீங்கும் ஏற்படவிடமாட்டார் என, தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஆவடி - பருத்திப்பட்டு பசுமைப் பூங்காவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலம்பாட்டக் கலைக்கூடம் சார்பில், இலவசசிலம்ப பயிற்சி வகுப்பை நேற்று முன்தினம் மாலை, தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கிவைத்த பின்னர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
திமுக எம்.பி, டி.ஆர்.பாலு அதிமுகவை கட்சி அல்ல, காட்சி என விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. 10 கார்ப்பரேட் நிறுவனங்களை நடத்திக்கொண்டிருக்கும் அவர், விவசாயம் ‘கார்ப்பரேட்' மயமாகிவிட்டது என கூக்குரல் இடுவதுபோலித்தனத்தின் உச்சம். எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கும் வழி திறந்துவிடுவது வேளாண் சட்டங்களின் நோக்கமல்ல. விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க, மாநில எல்லை கடந்து விற்பனை செய்ய வழிவகை செய்யும் ஒரு திட்டம் என நம்புகிறோம். தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு எந்த தீங்கும் ஏற்பட விடமாட்டார் என்பதை சொல்லிக்கொள்கிறேன் என்றார்.