

வாடிக்கையாளர்களின் பணப்பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, டெபிட், கிரெடிட் கார்டுகள்வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக, ரிசர்வ் வங்கிபுதிய விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது.
இதன்படி, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கார்டுகளில், அனைத்து சேவைகளும் இடம் பெற்றிருக்கும். ஆனால், அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை, தேவைப்படும் போது செயல்படுத்திக் கொண்டு, இதர நேரங்களில் அதை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.
இதற்கு, ஏடிஎம் இயந்திரத்தில், இதர சேவைகள் என்றபிரிவுக்குள் சென்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள சேவைகளை மீண்டும் செயல்படுத்திக் கொள்ளலாம். தேவையில்லாத நேரங்களில் அதை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு நிறுத்தி வைக்கும்போது, கார்டுகள் தொலைந்து போனால், அதை மற்றவர்களால் பயன்படுத்த முடியாது.
இதன்மூலம், வாடிக்கையாளர்களின் பணம் திருடப்படுவது தடுக்கப்படும். இந்த வசதி ஆன்லைன் வங்கி சேவையிலும் இடம் பெற்றிருக்கும். அதிலும், தேவையான சேவைகளை மட்டும் செயல்படுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே கார்டு வைத்துஉள்ளவர்கள் பழைய முறைப்படியே பயன்படுத்தலாம் எனவங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.