ரயில் முன்பதிவு குறுஞ்செய்தியில் இந்தி மொழி: ராமதாஸ் கண்டனம்

ராமதாஸ்: கோப்புப்படம்
ராமதாஸ்: கோப்புப்படம்
Updated on
1 min read

ரயில் முன்பதிவு குறுஞ்செய்தி இந்தியில் அனுப்பப்படுவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 4) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கான குறுஞ்செய்திகள் கடந்த இரு நாட்களாக இந்தியில் அனுப்பப்படுகின்றன. இந்தி பேசாத மக்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தி அனுப்புவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு ஆகும். இதை ரயில்வே துறை கைவிட வேண்டும்!

இந்திய அலுவல் மொழிச் சட்டம் -1976 தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது. இந்த சட்டத்தின் 'சி' பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் அனைத்து அலுவல் சார்ந்த அறிவிப்புகளும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். அதை மீறி இந்தியில் குறுஞ்செய்தி அனுப்பியது கண்டிக்கத்தக்கது!

தமிழ்நாட்டில் ரயில் முன்பதிவு குறுஞ்செய்தி இந்தியில் அனுப்பப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் தமிழிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட வேண்டும்!" என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in