கேரள எல்லையை ஒட்டிய தமிழக சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கேரள எல்லையை ஒட்டிய தமிழக சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
Updated on
1 min read

கேரள எல்ையை ஒட்டியுள்ள தேனி மாவட்டம் லோயர்கேம்ப் சோதனைச் சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள-தமிழக எல்லைப் பகுதிகளாக குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு உள்ளன. இப்பகுதிகளில் போலீஸ், வனத்துறை சோதனைச் சாவடிகள் உள்ளன. தற்போது கரோனா தொற்று நடவடிக்கையால் தமிழகத்தில் இருந்து கேரளா செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. இ-பாஸ் பெற்றுச் செல்லும் பொதுமக்கள் குமுளி வழியாகவும், கேரளாவுக்குச் செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களும் கம்பம் மெட்டு வழியாகவும் செல்கின்றன.

கடந்த சில நாட்களாக கம்பம் மெட்டு போலீஸ் சோதனைச் சாவடி முன்பும், லோயர் கேம்ப் பகுதியிலும் தமிழக போலீஸார் மணல் மூட்டைகள் அமைத்து துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லைப்பகுதியில் போலீஸார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் இப்பகுதிகளில் நக்சலைட் ஊடுருவல் உள்ளதோ என பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, எல்லை சோதனைச்சாவடிகளில் போலீஸார் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடு என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in