

இந்தியா முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா சமூக பரவலாக மாறிவிட்டதா என்பதைக் கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு நடத்தியது.
பல்வேறு மாநிலங்களில் உள்ள69 மாவட்டங்களில் இந்த ஆய்வுநடந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள 15மண்டலங்களில் 12,405 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், 2,673 (21.5 சதவீதம்) பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்தது. தமிழகத்தில் சிலவாரங்களுக்கு முன்பு 2-ம் கட்டஆய்வு நடத்தப்பட்டது. சென்னையில் 421, கோவையில் 428, திருவண்ணாமலையில் 410 பேரின் ரத்தமாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், சென்னையில் 141 (33.4%), கோவையில் 31 (7.2%),திருவண்ணாமலையில் 35 (8.5%)பேருக்கு கரோனாவுக்கு எதிரானநோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.