

கோவை பாரதியார் பல்கலைக்கழ கத்தில் 150 டன் விடைத்தாள் மாய மான விவகாரத்தில் பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அலு வலர் 3 நாள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் 150 டன் விடைத்தாள் மாயமாகி விட்டதாகக் கூறி பல் கலைக்கழக அலுவலர்கள் சங்கத் தினர் கடந்த 24-ம் தேதி முதல் உள்ளிருப்பு மற்றும் உண்ணா விரதப் போராட்டம் நடத்தி வந்தனர். இதுகுறித்து பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டுத்துறை சார்பில் அதன் அலுவலர் கிலே டிஸ் லீமாரோஸ், வடவள்ளி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிலேடிஸ் லீமாரோஸ் 3 நாள் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாக பல்கலைக்கழக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, மருத் துவ விடுமுறையில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு இ-மெயில் மூலமாக பணி இடை நீக்க உத்தரவு நேற்று காலை அனுப்பப்பட்டது.
இதேபோல், பாரதியார் பல்கலைக்கழகத்தில் செயல்படும் தொலைத்தூரக் கல்வி மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வெங் கடாசலம் என்பவர் மூலம் பல் கலைக்கழகத்துக்கு வழங்கப் பட்டு வரும் சேவைகள் நிறுத்திக் கொள்ளப்படும் என பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த நிறு வனமும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் வழங்கியுள்ளது.
நிதி ஆதாரங்கள் மற்றும் செலவினங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வரும் 4-ம் தேதிக்குள் ஆட்சிக்குழுவின் துணைக்குழு அளிக்கும் என்பது உள்ளிட்ட உறுதிகளின் அடிப்படையில் பல் கலைக்கழக ஊழியர்கள் போராட் டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர்.
சிண்டிகேட் உறுப்பினர் கருத்து
பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறும்போது, ‘விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில் விசா ரணை இதுவரை சரியாக நடை பெறவில்லை. பல்கலைக்கழக பதிவாளரின் அறிவுறுத்தலின் பேரி லேயே, விடைத்தாள்கள் இருக் கும் அறையின் சாவியை ஊழி யர்களிடம் தாம் கொடுத்ததாக, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், விசாரணைக் குழுவிடம் தெரிவித் துள்ளார்.
அவர் சார்பில்தான் வட வள்ளி போலீஸில் புகார் அளிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், புகார்தாரரையே, அதுவும் மருத் துவ விடுப்பில் உள்ளவரை பணி இடைநீக்கம் செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி யுள்ளது. புகார் தொடர்பாக சிபி சிஐடி விசாரணை நடந்தால்தான் உண்மை வெளிவரும்’ என்றார்.
இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் செந்தில்வாசன் கூறும் போது, ‘தேர்வு கட்டுப்பாட்டு அலுவலக பொறுப்பு என்பது தனித்துறை. பதிவாளர் அலுவலகத் துக்கும், அதற்கும் தொடர்பு கிடையாது. துணைவேந்தரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் இயங் குகிறது. நிலைமை இப்படி இருக் கையில் பதிவாளரால் எப்படி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு உத்தரவு போட முடியும்’ என்றார்.
துணைவேந்தர் பதில்
இதுகுறித்து பல்கலை துணை வேந்தர் ஜேம்ஸ் பிச்சை கூறும் போது, ‘விடைத்தாள் தொடர்பான புகாரில் விசாரணை நடந்து வருகி றது. பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டுத்தான் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விசார ணையின் அடிப் படையில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.