திமுக.மாவட்டப் பிரிப்பில் மாறுபாடு: ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து களம் காண்பாரா தங்க தமிழ்ச்செல்வன்?

திமுக.மாவட்டப் பிரிப்பில் மாறுபாடு: ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து களம் காண்பாரா தங்க தமிழ்ச்செல்வன்?
Updated on
1 min read

தேனி வடக்கு திமுக.மாவட்டத்தில் பெரியகுளம், போடி சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இம்மாவட்ட பொறுப்பாளரான தங்க தமிழ்ச்செல்வன் வரும் தேர்தலில் துணை முதல்வரை எதிர்த்துப் போட்டியிடும் நிலை உள்ளது.

தேனி மாவட்டம் கட்சிரீதியாக ஒரே மாவட்ட அமைப்பாக இருந்தது. தற்போது நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை திமுக,அமமுக வெளியிட்டுள்ளது.

திமுக. அறிவிப்பின்படி தெற்கு மாவட்டத்தில் கம்பம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியும், வடக்கு மாவட்டத்தில் பெரியகுளம் (தனி),போடி தொகுதியும் வருகின்றன.

தெற்கு மாவட்டத்திற்கு கம்பம் என்.ராமகிருஷ்ணனும், வடக்கு மாவட்டத்திற்கு தங்க தமிழ்ச்செல்வனும் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தங்க தமிழ்ச்செல்வனைப் பொறுத்தளவில் ஆண்டிபட்டி தொகுதியில் 2001, 2011,2016ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தொகுதியில் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.

இந்நிலையில் தற்போது பிரிக்கப்பட்ட வடக்கு மாவட்டத்தில் ஆண்டிபட்டிக்குப் பதிலாக போடி தொகுதி வருகிறது. இதனால் இவர் ஆண்டிபட்டியில் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

மேலும் பெரியகுளம் தனி தொகுதி என்பதால் போடியில் தான் இவர் போட்டியிட வேண்டிய நிலை உள்ளது.

போடி துணை முதல்வரின் தொகுதி ஆகும். எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் களம் காணும் நிலை உள்ளது.

இது குறித்து கட்சியினர் கூறுகையில், ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மகாராஜன் தற்போது திமுக. சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் வடக்கு மாவட்டத்தில் ஆண்டிபட்டி தொகுதிக்குப் பதிலாக போடியை இணைக்கக்கோரி தலைமைக் கழகத்தில் வலியுறுத்தியதால் தொகுதி மாற்றி மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in