நாட்டில் மாற்றம் ஏற்பட திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு முக்கியம்: அண்ணாமலை

கரூரில் நேற்று நடைபெற்ற தூய்மை பாரத இயக்க விழாவில் பேசுகிறார் பாஜக மாநில துணைத் தலைவர் கே.அண்ணாமலை. உடன், மாவட்டத் தலைவர் கே.சிவசாமி உள்ளிட்டோர்.
கரூரில் நேற்று நடைபெற்ற தூய்மை பாரத இயக்க விழாவில் பேசுகிறார் பாஜக மாநில துணைத் தலைவர் கே.அண்ணாமலை. உடன், மாவட்டத் தலைவர் கே.சிவசாமி உள்ளிட்டோர்.
Updated on
1 min read

கரூரில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நேற்று நடைபெற்ற தூய்மைப்பணி தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பணியைத் தொடங்கி வைத்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.அண்ணாமலை நிகழ்ச்சியில் பேசியதாவது:

தூய்மை பாரத இயக்கம் 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நாட்டில் 600 மாவட்டங்களில் திறந்தவெளியில் மலம் கழித்தல் என்பதே இல்லை என மாற்றப்பட்டுள்ளது. என்னதான் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினாலும், பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பும் இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம். தூய்மை பாரதம் மிஷன்- 2 திட்டத்தில் குப்பைகள், நீர்நிலைகள், காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.கரூரில் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்று கோவை சாலையில் நடந்து சென்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சந்தித்த அண்ணாலை, அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்தார். பதிலுக்கு அமைச்சரும் அண்ணாமலைக்கு பொன்னாடை அணிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in